Monday, January 8, 2007

பார்ப்பன மகனே பார்ப்பன மகனே

Anonymous இட்டிருக்கும் பதிவிற்க்கு பதில் இந்த பதிவு.

பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணனார் என்ற புலவர் தனது குறுந்தொகைப் பாடலில் கீழ்க்கண்டவாறு பாடியுள்ளார்.

பார்ப்பன மகனே பார்ப்பன மகனே
செம்பூ முருக்கி னன்னார் களைந்து
தண்டொடு பிடித்த தாழ்கமண் டலத்துப்
படிவ உண்டிப் பார்ப்பன மகனே
எழுதாக் கற்பி னின்சொல் உள்ளும்
பிரிந்தோர்ப் புணர்க்கும் பண்பின்
மருந்தும் உண்டோ மயலோ விதுவே.

-பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணனார்.

எனக்கு இந்த குறுந்தொகைப் பாடலின் அர்த்தம் எனக்குப் புரியவில்லை. தமிழ் அர்த்தம் தெரிந்த தமிழ் அறிஞர்கள் என் சந்தேகத்தினைத் தீர்க்க வேண்டுகிறேன்.

எனக்கு நண்பர் சொன்ன அர்த்தம்:-

பார்ப்பன மகனே, பார்ப்பன மகனே! சிவப்பான பூவை தலையில் அணிந்து மேலாடையை அகற்றி ஒரு கையில் தண்டையும், இன்னொரு கையில் கமண்டலத்தையும் பிடித்துக் கொண்டு உஞ்சவிருத்தி செய்து உழைக்காமல் உண்டி கொழுப்பவனே! கற்பு என்ற மிகச்சிறந்த வார்த்தையின் பொருளை படிக்காதவரும் உணர்ந்து அதன்வழி நடக்கும்போது நீ கண்டவரைப் புணர்ந்து காமத்தில் மயங்கி உயிர்வாழ்தல் தகுமோ?

எழுதியவர்: Anonymous at 12:37 AM

-------------------

Anonymousக்கு தமிழ் அறிஞர்கள் சொல்லும் அர்த்தம்:

பார்ப்பன மகனே பார்ப்பன மகனே
சிவப்பு பூ உடைய முருங்கை மரக் கொம்பில் பூவையையும் இலையையும் களைந்து
அதனை கொம்பொடு/தண்டோடு பிடித்த சிறிய கமண்டலத்தை உடைய
சிறிய அளவான உணவு கொள்ளும் பார்ப்பன மகனே
சொல்ல முடியாத கற்பு உணர்வில் தோன்றும் இனிய சொல்லை மனத்தில் நினைத்து
பிரிந்தவரைச் சேர்த்து வைக்கும் உன் சிறந்த பண்பை விட பெரிய
மருந்தும் இருக்கிறதா? புரியாத புதிர் இது.

No comments: