Thursday, January 18, 2007

தமிழ்மண நிர்வாகத்தின் சுறுசுறுப்பும் சோம்பலும்

தமிழ்மணத்தில் பல காலமாக வாசகனாக இருக்கும் நான் பிளாக்கர் ஆசையில் ஒரு பதிவு தொடங்கி எனக்கு பிடித்த மூன்று பாரதியார் கவிதைகளை முதல் மூன்று இடுகைகளாக இந்த பதிவில் போட்டிருந்தேன். தமிழ்மண பட்டையை பதிவில் சேர்த்துவிட்டு தமிழ்மணத்திலும் சேருவதற்கு விண்ணப்பித்தேன். மறுநாளே பதிவு தமிழ்மணத்தில் சேர்த்துகொள்ளப்பட்டது. ஆனால் எனக்கு தமிழ்மண பட்டை தெரியவில்லை. எல்லோருக்கும் உதவும் பொன்ஸக்காவிடம் கேட்டேன். அவர் என் பதிவை பார்ப்பதற்குள் இடுகைகள் தானாக தமிழ்மணத்தில் தெரிந்தது. அவரிடம் கேட்டால் அவரும் எதுவும் செய்யவில்லை என்று சொல்லிவிட்டார். எனக்கு இப்போதும் தமிழ்மண பட்டை தெரியவில்லை. அடுத்த பதிவு இட்ட போது அதில் தமிழ்மண பட்டை தெரிந்தது. தமிழ்மண பட்டை தெரியாத பதிவுகளை பின்னர் இட்டுக்கொள்ளலாம் என்று அவற்றை அழித்தேன். மறுநாளே ஆச்சரியமாக ஒரு தனிமடல் தமிழ்மண நிர்வாகிகளிடம் இருந்து வந்தது - என் பதிவு தமிழ்மணத்தில் இருந்து நீக்கப்பட்டதாக. மடலில் சொல்லியிருந்தது இது.
----------
Email on Jan 8th, 2007.

Dear ராஜசன்,
Your blog is Removed from listing by www.thamizmanam.com Administrator due to follwing reason,
good bye the one with one post. When I approved this blog on 24th December, 2006 it was NOT with a single post. Thank you for the understanding


நிர்வாகி
www.thamizmanam.com.
------------

எவ்வளவு சுறுசுறுப்பு பாருங்கள் தமிழ்மன நிவாகிகள்? முதல் மூன்று இடுகைகள் நீக்கிய 12 மணி நேரத்துக்குள்ளாகவே தமிழ்மணத்தில் இருந்து நீக்கிவிட்டார்கள். அவர்களின் சுறுசுறுப்பை பாராட்டி தனிமடல் அனுப்பினேன். அப்போது திரும்பவும் மூன்று பதிவுகள் போட்டாயிற்று.

--------
Email on Jan 8th, 2007

அன்பின் தமிழ்மண நிர்வாகி,

நீங்கள் இவ்வளவு விரைவாக நடவடிக்கை எடுப்பதை கண்டு மகிழ்ச்சி. என் பதிவில் இப்போது மூன்று இடுகைகள் இருக்கின்றன. மீண்டும் தமிழ்மணத்தில் என் பதிவை சேர்த்து கொள்ளுங்கள்.

அன்புடன்,
ராஜசன்.

-----------
தமிழ்மணத்திற்குச் சென்று மீண்டும் பதிவை சேர்த்து கொள்ள விண்ணப்பித்தேன். விண்ணப்பித்து ஒரு வாரத்திற்கும் மேல் ஆகிவிட்டது. தமிழ்மணத்தில் சேர்த்து கொள்ளப்படவில்லை. தனிமடலில் கேட்டும் எந்த பதிலும் இல்லை. தமிழ்மணத்தாருக்கு வேலைப்பளு அதிகமாகிவிட்டதா இல்லை வேண்டுமென்றே என் பதிவு நிறுத்தப்பட்டிருக்கிறதா? அனுமதிக்காத காரணத்தை தமிழ்மணத்தார் சொன்னால் நன்றாக இருக்கும்.

------

Email on Jan 10th, 2007

மதிப்பிற்குரிய தமிழ்மணம் நிர்வாகிகளே.

என் பதிவை தமிழ்மணத்தில் சேர்த்துக் கொள்ள இரண்டு நாட்களுக்கு முன் பதிவு செய்தேன். அது இன்னும் சேர்க்கை நிலவரம் பட்டியலில் இருக்கிறது. எனக்குப் பின் பட்டியலில் வந்த பதிவுகள் அனுமதிக்கப்பட்டுவிட்டன. அதனால் ஏதோ காரணத்தால் என் பதிவு தமிழ்மணத்தில் சேர்த்துக் கொள்ளப்படாமல் இருக்கிறது என்று தோன்றுகிறது. ஏதாவது கேள்விகள் இருந்தால் என்னிடம் கேளுங்கள். அல்லது ஏன் சேர்த்துக் கொள்ளபடவில்லை என்று தயவு செய்து தெரிவியுங்கள்.

அன்புடன்,
ராஜசன்

No comments: