(இப்பதிவு நகைச்சுவைக்காக மட்டும்....)
என்னுடைய நண்பர் வீட்டில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். அப்பொழுது அவருடை ஐந்து வயது மகன் வந்து DADDY, " WHAT IS சிவபாலன்!" என்றான்.
இப்ப ஏன் அதை கேட்கிறாய்? என்றார் எனது நண்பர்.
அதற்கு அவரது மகன், 'நீங்க அதை அடிக்கடி சொல்றீங்க..'
'அது என் நண்பர் பேரு' என்றான் எனது நண்பர்.
அவருடைய மகனுக்கு அது திருப்தி அளிக்கவில்லை. மீண்டும் அதையே கேட்டான்.
எனது நண்பர் சற்று நேரம் மவுனம்காத்தார்.
அதற்குள் அவரது மனைவி IT IS NAME OF A GOD! என்றார்.
அப்பொழுதும் அவருடைய மகனுக்கு ஏனோ அந்த பதிலில் உடன்பாடில்லாமல் மீன்டும்.. DADDY, " WHAT IS சிவபாலன்!" என்றான்.
அதற்கு நாத்திகரான எனது நண்பர்..
..
..
..
..
IT IS A FUNNY WORD! என்றார்.
(அறிவாளி சிவபாலனுக்கு அது முருகன் பேருன்னு தெரியாதா என்ன? இதெல்லாம் நகைச்சுவையா தான் எடுத்துக்குவார். அந்த அறிவாளி நண்பர் யாருன்னு கேக்கறீங்களா? கோக உங்களுக்கு தெரிஞ்சிருக்கனுமே. )
Wednesday, January 24, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment