வலைப்பதிவர் நண்பர் ஓசை செல்லா 'தலித் விடுதலை, பெண்ணியம், பார்பணீயம், பெரியார்!! நாசமாகப் போக!' என்ற தலைப்பில் ஒரு பதிவு இட்டிருக்கிறார். அவர் எந்த பதிவின் பின்னூட்டத்திற்காக இந்த பதிவை எழுதியிருக்கிறாரோ அந்த பதிவை படிக்கவில்லை இன்னும். இந்த பதிவில் சொல்லியிருக்கும் கருத்துக்கு மட்டுமே இந்த விமரிசனம்.
சொல்ல வந்த கருத்தை தெளிவாக சொல்லியிருக்கிறார். வரலாற்று பார்வையுடன் இருக்கும் பலருக்கும் இவர் சொல்வதை ஒத்து கொள்ள முடியும். ஒருவர் மேல் அபரிமிதமான அன்பு இருந்தால் அவரின் செல்வாக்கு நிஜத்தில் எத்தனை தூரம் இருக்கிறதோ அதனை விட பல மடங்கு அதிகமாக இருப்பதாக தோன்றும். அந்த தவறை இவரின் இந்த பதிவிலும் பார்க்க முடிகிறது. அவா ஆத்து பெண்கள் மடிசாரிலிருந்து சுடிதாருக்கு மாறியதற்கு பெரியாருக்கு அதிக பங்கு இருப்பதாக சொல்வது பூனை கண்ணை கட்டிக் கொண்டு உலகம் இருண்டுவிட்டது என்று சொல்வது போல் இருக்கிறது. போன நூற்றாண்டில் நிகழ்ந்த எத்தனையோ அறிவியல் முன்னேற்றங்களால் மடிசாரிலிருந்து சுடிதாருக்கு மாறினார்கள் அவா ஆத்து பெண்கள். உலகில் மாற்றங்களை முதலில் ஏற்று கொள்பவர்கள் அவா தான் என்பது செல்லாவுக்கும் தெரியும். ஆனால் அவருக்கு பெரியாரின் வீச்சை பற்றி பெருமையாக சொல்ல வேண்டும். அதனால் அப்படி சொல்கிறார். அவர் தன்னிடமே கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வி. அவா ஆத்து பெண்கள் மடிசாரிலிருந்து சுடிதாருக்கு மாற தூண்டிய பெரியாரின் கருத்துகள் ஏன் மற்ற சாதி பெண்களை கண்டாங்கி சேலை கட்டுவதில் இருந்து மாற்றவில்லை?
விதவை மறுமணமும் சகுனத்தை பார்ப்பதும் பெரியாரின் கருத்துகளின் வீச்சினால் மட்டுமே ஏற்பட்டது என்பதும் இதே வகையே. ராஜா ராம்மோகன் ராய் போன்ற அறிஞர்களின் முயற்சிகள் தான் இந்த மாற்றங்களை கொண்டு வந்தது என்பது வரலாற்று உண்மைகள்.
மற்றவர்களை கண்ணிருந்தும் குருடர்கள் என்று சொல்லிவிட்டு அவர்களை நாசமாக்க சபதம் மேற்கொள்ளும் நண்பர் தானும் அதே தவறை செய்வதை கொஞ்சம் கவனத்தில் கொள்ள வேண்டும். இல்லையேல் அதே தவறு அவருக்கும் அவரை போன்றவர்களுக்கும் அதே நாசத்தை கொடுக்கும். இதுவும் சாபம் அல்ல.
Tuesday, January 9, 2007
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
pathil sollum alavukku niingkal kelvi ezuppavillai! nandri! ariya samaajam rajaram mohan roy thaan thamizaka thiravita poorkku .. athuvum penkalukku .. ahaa! kaamlai ungkalukku thaan polum nanpare! niraiyappadiththu kuraivaaka eluthungkal! raakula saankiruththiyaayanai miindum purattungkal!
OSAI CHELLA
Post a Comment